2 மாதத்தில் 2 மடங்கு லாபம்.. டெக்ஸ்டைல் துறையில் இப்படி ஒரு நிறுவனமா..?

கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பு இழப்பு மூலம் வருமானத்தை அதிகளவில் நிலையில் பங்குச்சந்தையில் பல நிறுவனங்கள் பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.

குறிப்பாகக் கொரோனா தொற்று 2வது அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் அதிகளவிலான நிறுவனங்கள் மல்டிபேக்கர் ஆக மாறியது.

இந்த மல்டிபேக்கர் பட்டியலில் கடைசியாகச் சேர்ந்த சில நிறுவனங்களில் ஒன்று தான் இந்த டெக்ஸ்டைல் துறை பங்கு.

டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறி தொழில் பாதிப்பு.. ஜனவரி 1 முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு..!

லக்னம் ஸ்பின்டெக்ஸ்

லக்னம் ஸ்பின்டெக்ஸ்

தேசிய பங்குச்சந்தையில் நவம்பர் 30, 2021ல் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெறும் 47.20 ரூபாயாக இருந்த நிலையில் வெறும் 2 மாத இடைவெளியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்து 94.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை வல்லுனர்கள்

பங்குச்சந்தை வல்லுனர்கள்

மேலும் பங்குச்சந்தை வல்லுனர்களும் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் அடிப்படை மற்றும் முக்கியமான தரவுகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் காரணத்தால் அதிகளவிலான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால் அனைத்து முக்கியமான விஷயங்களையும் சரி பார்த்துக்கொண்டு அதன் பின்பு முதலீடு செய்யுங்கள்.

218 கோடி ரூபாய் முதலீடு
 

218 கோடி ரூபாய் முதலீடு

சமீபத்தில் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 218 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் விரிவாக்க பணிகளைச் செய்ய உள்ளதாகவும், இது 300 கோடி ரூபாய் வரையிலும் அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பருத்தி நூல் தயாரிப்பு

பருத்தி நூல் தயாரிப்பு

மேலும் பருத்தி நூல் தயாரிக்கும் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவன பங்கின் விலை 90 ரூபாய் அளவில் இருக்கும் நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் 115 ரூபாய் வரையில் உயரவும் வாய்ப்பு உள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தி விரிவாக்கம்

உற்பத்தி விரிவாக்கம்

லக்னம் ஸ்பின்டெக்ஸ், இந்தியாவில் உயர்தரப் பருத்தி நூல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள விரிவாக்கத் திட்டம் அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் 2024 ஏப்ரல் 1 முதல் உற்பத்தி அதிகரிக்கும்.

70 டன்

70 டன்

லக்னம் ஸ்பின்டெக்ஸ் தற்போது ஒரு நாளுக்கு 35 டன் பருத்து நூல் உற்பத்தி செய்யும் நிலையில் 70 டன்னாக உயர உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய முடியும், கூடுதல் வருமானத்தைப் பெற முடியும், உள்நாட்டு வர்த்தகத்தைத் தாண்டி வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

லாபம்

லாபம்

டிசம்பர் காலாண்டில் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவுகள் 107 சதவீதம் அதிகரித்து 9.4 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் 4.54 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Investor money double in 2 months; Lagnam Spintex turned Multibagger textile stock

Investor money double in 2 months; Lagnam Spintex turned Multibagger textile stock 2 மாதத்தில் 2 மடங்கு லாபம்.. டெக்ஸ்டைல் துறையில் இப்படி ஒரு நிறுவனமா..?

Story first published: Wednesday, February 9, 2022, 20:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.