லண்டன் : பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயுவிற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தொழில் துறை முடங்கியது. தேவை மற்றும் சப்ளை குறைந்தது.இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைகளில் எரிவாயு பயன்பாடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 2021 துவக்கத்தில் இருந்ததை விட எரிவாயுவின் விலை, வரலாறு காணாத வகையில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தாண்டு பிரிட்டன் குடும்பங்களில், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பயன்பாட்டிற்கான செலவு உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு குடும்பத்தின் எரிசக்தி செலவினத்தில், 70 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயுவிற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.nsimg2957834nsimg ஐரோப்பிய நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.