புதுச்சேர-புதுச்சேரி கலால் வருவாய், முதல் முறையாக 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடைகள்-50, சாராயக்கடைகள்-80, மதுபான கடைகள்-284 என மொத்தம் 414 கடைகள் உள்ளன.மாநிலத்தின் வருவாய், கலால் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல், கலால் வருவாயை பெரிதும் பாதித்தது.கடந்த 2019-20 ம் ஆண்டு கலால் வருவாய் 857 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 81.70 கோடி ரூபாய் அளவிற்கு சாராயம் விற்பனையாகி இருந்தது. 2020-21 ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், புதுச்சேரியில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக 91 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, 766 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே கலால் துறைக்கு வருவாய் கிடைத்தது.இதனை தொடர்ந்து வருவாய் இழப்பினை சரிகட்ட, 20 சதவீத சிறப்புவரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, கலால் துறை வருவாய் உயர தொடங்கியது.தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் கலால் வருவாய் முதல் முறையாக 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது.இது குறித்து கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கூறியதாவது:இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ.எம்.எல்.ஏ., மதுபானங்கள் மீதான வரியின் மூலம் 842 கோடி ரூபாயும், சாராயம் மூலம் 119.28 கோடி ரூபாய் என மொத்தம் 870 கோடி ரூபாய், கலால் துறைக்கு நடப்பாண்டில் (2021 -22) வருவாய் கிடைத்துள்ளது.இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள், கலால் வரி 1000 கோடி ரூபாய் இலக்கினை எட்டிவிடும். 20 சதவீத சிறப்பு வரி மட்டுமின்றி, வரி ஏய்ப்பினை தடுக்க தனி கவனம் செலுத்தினோம். மது கொள்முதல் முதல் விற்பனை வரை பல்வேறு நிலைகளில் ‘செக் பாயின்ட்’ அமைத்து கண்காணித்தோம்.பல குழுக்களை நேரடியாக மதுக்கடைகளுக்கு அனுப்பி இருப்புகளை சோதனை செய்தோம். சட்ட விரோத மதுபான விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டோம். இதன் காரணமாக கலால் வருவாய் முதல் முறையாக 1000 கோடி ரூபாய் இலக்கினை தொட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். கலால் துறை வருமானம் (கோடியில்)ஆண்டு வருமானம்2016-17 6712017-18 7692018-19 8502019-20 8572020-21 7662021-22 870
Advertisement