இந்தியாவிலேயே புகழ் பெற்ற பாடகியான
லதா மங்கேஷ்கர்
உடல்நலக்குறைவால் சிலநாட்களுக்கு முன் காலமானார். 92 வயதான லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு முதலே சினிமா துறையில் பாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியுள்ள லதா தமிழில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார்.
இருப்பினும் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட பாடகியாகவே அவர்களது மனதில் இடம்பெற்றுள்ளார் லதா. தற்போது அவர் பிரிந்தது அனைத்து சினிமா ரசிகர்களையும், சினிமா துறையை சார்ந்தவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 92 வயதில் மறைந்த லதா அவர் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ளவில்லை.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவின் மாஸ்டர் பிளான்..வெளியான அதிர்ச்சி தகவல்..!
இந்நிலையில் அவர் இளமை வயதில் காதல் கொண்ட கதை இணையத்தில் பரவி வருகிறது. லதாவிற்கு சிறுவயது முதலிருந்தே
கிரிக்கெட்
போட்டியின் மீது அலாதி பிரியமாம். இதுபோக அவரின் சகோதரர் ஹரிதயநாத் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த கிரிக்கெட் வீரர்
ராஜ் சிங்
துங்கார்புர் ஹரிதாயநாத் அவர்களுக்கு நெருங்கிய நண்பரானார். கிரிக்கெட் விளையாடும்போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைதொடந்து ராஜ் சிங் ஹரிதாயநாத் வீட்டிற்கு அடிக்கடி செல்வாராம். அவ்வாறு செல்லும்போது லதா மற்றும் ராஜ் சிங் சந்தித்து பேசிக்கொள்வார்களாம்.
கிரிக்கெட் வீரரான ராஜ் சிங்கிற்கு இசை மீது அதிக விருப்பம். அதேபோல் பாடகியான லதாவிற்கு கிரிக்கெட்டின் மீது அலாதி பிரியம். இதுவே இவர்களின் பழக்கத்தை நெருக்கமாகியது. நண்பர்களாக பழக ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியதாக கூறப்படுகிறது.பின்பு ஒருசில காரணங்களால் இவர்களின் காதல் முடிவுக்கு வந்தது. இந்த காதல் தோல்வியினால் தான் லதா கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ராஜ் சிங் கடந்த 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார். எனவே பல காதல் பாடல்களை பாடி நம்மை அசத்திய லாதாவிற்கும் ஒரு காதல் கதை இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெரிய ஹீரோ , சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லை , நல்ல படங்கள் பண்ணுவேன் – நடிகை திவ்யபாரதி!