பெங்களூரு-அபராதம் செலுத்தாமல் ஏமாற்றியவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க, மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாகன விதிமீறல், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.ஆனால் பலரும் அபராத கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றி விடுகின்றனர்.அவர்களிடம் அபராத கட்டணத்தை வசூலிக்க முதற்கட்டமாக நான்கு மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு உதவி எஸ்.ஐ., தரத்தில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரின் பத்தரஹள்ளி, கஸ்துாரிநகர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, ெஹச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து போலீஸ் டி.சி.பி. சாந்தராஜு கூறியதாவது:வாகன உரிமையாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகங்களுக்கு பல்வேறு சான்றிதழ் பெற வரும்போது, அவர்களின் விபரங்கள், விதிமுறை மீறல்கள் சரிபார்க்கப்படுகிறது.அபராத தொகை ஏதேனும் செலுத்தாமல் இருப்பின், முதலில் அந்த கட்டணத்தை செலுத்திவிட்டுபின் மட்டுமே அவர்களுக்கு தேவையான சான்றிதழ் பெற முடியும்.இவ்வாறு இரண்டு நாட்களில் சரிபார்த்ததில் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 24 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு கூறினார்.
Advertisement