சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் 6 பேர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல்நிறுவனம், கல்வி நிர்வாகத்தில் புதுமைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உருவாக்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், 2018-2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா.சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.மணிகிருஷ்ணன் ஆகியோரும், 2019-2020-ம் ஆண்டுக்கான விருதுக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சோ.கிருஷ்ணபிரியா, நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆர்.கார்த்திக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது வழங்கும் விழா இன்று (பிப்.10) பிற்பகல் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.