ஐக்கிய அரபு நாடுகளில் இனி வரி கட்டாயம்.. சவுதி அரேபியாவுக்கு சவால் விடுகிறதா #Dubai..!

கச்சா எண்ணெயை மட்டுமே நம்பி பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் உருவாக்கி ஒரு சிறு வலையில் சிக்கிக்கொண்டு இருந்த பல வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஆனால் துபாய் அரசு பல ஆண்டுக் காலத் திட்டமிடல் உடன் தொடர்ந்து மாற்றங்கள் மூலம் படிப்படியாகத் தற்போது உலகின் முன்னணி வர்த்தக நாடுகளுக்கு இணையாக இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சர்வதேச வர்த்தக நாடுகளுக்கு இணையாகத் தன்னை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு முக்கியமான மாற்றத்தை ஐக்கிய அரபு நாடுகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது ரொம்ப காஸ்ட்லியான விவாகரத்து.. துபாய் மன்னர் மனைவிக்கு ரூ.5,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம்!

 துபாய் அரசு

துபாய் அரசு

சர்வதேச வர்த்தகச் சந்தை உடன் சேர ஐக்கிய அரபு நாடுகள் எடுத்த முடிவுகளும், அதை நடைமுறைப்படுத்தியது முதல் முதலீட்டுச் சந்தையில் தனிக் கவனத்தைப் பெற்றது. தற்போது துபாய் அரசு முக்கியமான ஒரு விதியை அமலாக்கம் செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டு தொழிற்துறை வல்லுனர்கள், நிதியியல் துறை வல்லுனர்கள் முதல் பல நாடுகள் ஐக்கிய அரபு நாடுகளைப் பாராட்டி வருகிறது.

 பெடரல் கார்பரேட் வரி

பெடரல் கார்பரேட் வரி

ஐக்கிய அரபு நாடுகள் தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நிறுவிய சர்வதேச வரி தர வார்ப்புரு-க்கு இணையாக 9 சதவீதம் பெடரல் கார்பரேட் வரியை அமலாக்கம் செய்துள்ளது.

 ஐக்கிய அரபு நாடுகள்
 

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகளின் இந்த முடிவு புதிய உத்வேகத்தையும், வளர்ச்சி வாய்ப்புகளையும் சேர்க்கும். இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அதிகம் செல்லாத மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (MENA) பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு UAE வளர்ச்சி இன்ஜினாக இருக்கும்.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்த மாற்றம் UAE நாட்டின் பொருளாதாரம் படிம எரிபொருளில் இருந்து ஈட்டப்படும் பாரம்பரிய வருவாயைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைத்து புதிய வர்த்தகத் துறையில் வருமானத்தை ஈட்ட துவங்கும்.

 20 யூனிகார்ன் இலக்கு

20 யூனிகார்ன் இலக்கு

நேற்று வெளியான அறிவிப்பில் துபாயில் தற்போது இருக்கும் 10,000 சிறு மற்றும் நடுத்தர ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 2030க்குள் 20 யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கி உலக நாடுகளில் தனது வர்த்தகத்தைக் கொண்டு செல்ல இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 சவுதி அரேபியா Vs ஐக்கிய அரபு நாடுகள்

சவுதி அரேபியா Vs ஐக்கிய அரபு நாடுகள்

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் மத்தியிலான வளர்ச்சி போட்டியில் இரு நாடுகளும் பல வெளிநாட்டு முதலீடுகளையும் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள் உற்பத்தித் துறை முதல் சேவைத் துறை வரையில், பார்மா நிறுவனங்கள் முதல் ஐடி சேவை நிறுவனங்கள் வரையில் பல நிறுவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE Govt complying 9 percent Corporate Tax; Big growth awaits for MENA region

UAE Govt complying 9 percent Corporate Tax; Big growth awaits for MENA region ஐக்கிய அரபு நாடுகளில் இனி கார்பரேட் வரிக் கட்டாயம்.. MENA பகுதியில் புதிய மாற்றம்..! #Dubai

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.