4 நாட்களுக்கு பிறகு சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

கடந்த நான்கு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்தது. எனினும் இன்று காலை அமர்வில் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா?

தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அதெல்லாம் சரி சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தூள் கிளப்பி வரும் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

தடுமாற்றத்தில் பத்திர சந்தை

தடுமாற்றத்தில் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்தது. எனினும் இன்று தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினை தடுத்துள்ளது. இது பெரியளவிலான சரிவினைக் தடுத்துள்ளது. மேலும் வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான் தரவானது தங்கம் விலையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பத்திர சந்தைக்கு செல்லும் முதலீடுகள் தங்கத்திற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

கச்சா எண்ணெய் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தற்போது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. அமெரிக்கா சவுதி மற்றும் ஈரானிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் எண்ணெய் சப்ளையானது அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. எண்ணெய் விலையினால் அதிகரிக்கும் பணவீக்கம் என்பது சரிவினைக் கண்டாலும், நுகர்வோர் விலை பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை பெரியளவில் குறையாமல் இருக்க காரணமாக அமைந்துள்ளது.

அரசியல் பதற்றம்
 

அரசியல் பதற்றம்

தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா- உக்ரைன் பிரச்சனையும் புகைந்து கொண்டுள்ளது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையேயான உறவிலும் விரிசல் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு அதிகரித்தால். சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.45 டாலர்கள் குறைந்து, 1835.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையும், குறைந்தபட்ச விலையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.288 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே காணப்படுகின்றது. எனினும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 48,683 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 28 ரூபாய் குறைந்து, 62,660 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத்தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது தற்போது குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 4,601 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 36,808 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 5,020 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 40,160 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 66.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 668 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையிலும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாகவே தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 10th February 2022: gold price struggling after 4 days rise

gold price on 10th February 2022: gold price struggling after 4 days rise/4 நாட்களுக்கு பிறகு சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Story first published: Thursday, February 10, 2022, 11:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.