ஹாங் காங்கில் ஒருநாள் கொரோனா எண்ணிக்கை ஆயிரத்து 100ஐ கடந்து புது உச்சம் தொட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூடுவதற்கு இருவருக்கு மட்டும் அனுமதி, கோவில்கள், ஷாப்பிங் மால், திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகளுக்குள் பொது மக்கள் நுழைய தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை மேற்கொள்ள மறுப்பவர்களுக்கு இரட்டிப்பு அபராதங்கள் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சலூன்கள் 2 வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டதால் கடைகளின் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.