2020 இல் இருந்து ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்துவரும்
கொரோனா வைரஸ்
அப்போது உருமாறி வருவதால். அதன் வீச்சு இதுவரை மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.
ஒவ்வொரு அவையிலும் அதன் வீரியத்துக்கேற்ப லட்சக்கணக்கில் உயிர் பலி வாங்கி வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றன.
என்னதான் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என தடுப்பூசி போட்டாலும் வைரஸ் உருமாறும்போது மனிதர்களை கொரோனா தாக்கிதான் விடுகிறது. கொரோனா தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவதே சிறந்த எளிதான வழி என்று மருத்துவர்கள் ஆண்டுகணக்கில் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ஒரு அளவுக்குத்தான் மதத்தை பின்பற்ற வேண்டும்.. எல்லை காந்தியின் பேத்தி
கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றின் மூலம் பரவி, மனிதர்களின் சுவாசப் பாதையை பதம் பார்க்கும் அபாயம் உள்ளதால், மாஸ்க் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ நிபுணர்களின் இந்த வற்புறுத்தலை பொதுமக்கள் எந்த அளவுக்கு தீவிரமாக கருதி பின்பற்றுகின்றனர் என்பது இன்றுவரை பெரிய கேள்வியாக உள்ள நிலையில், புதுவித மாஸ்க்கை கண்டறிந்து
இந்திய விஞ்ஞானிகள்
அசத்தியுள்ளனர்.
தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்களால் பூசப்பட்ட இந்த புதுவித மாஸ்க், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் திறன் படைத்தவை. அத்துடன் எளிதில் மக்க கூடிய தன்மைக் கொண்டவை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழில் கேள்வி கேட்டால் .. இந்தியில் பதில் சொல்வதா?.. லோக்சபாவில் கொந்தளிப்பு
மேலும் இந்த புதிய மாஸ்க் அணிபவர்கள் எளிதாக சுவாசிக்கவும், அடிக்கடி துவைத்து பயன்படுத்தவும் இயலும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பீதியில் உள்ள ஒட்டுமொத்த உலகமக்களுக்கே வரப்பிரசாதமான இந்த நவீன மாஸ்க் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.