கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில்
ஹிஜாப்
அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.
மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக
பாகிஸ்தான்
அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “கர்நாடகாவில்
முஸ்லிம் மாணவிகள்
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இந்த சம்பவம் வருத்தமும் அளிக்கிறது. கர்நாடகாவில் மாண்டியா நகரில் கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவரை காவி சால்வை அணிந்த ஆண்கள் குழு சூழ்ந்து வந்து கோஷமிட்ட வீடியோவைக் குறிப்பிட்டு, இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களின் “பாதுகாப்பை” இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கேள்வி கேட்டால் .. இந்தியில் பதில் சொல்வதா?.. லோக்சபாவில் கொந்தளிப்பு
முன்னதாக, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.