புதுடெல்லி:
தலைநகர் புதுடெல்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தி வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அளித்த பதில்:
அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி உள்ளது. அதேபோல், 10 ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை பாக்கி உள்ளது.
சோனியா காந்தியின் தனிச்செயலர் வீணா ஜார்ஜ் கடைசியாக 2013, ஆகஸ்டில் வாடகை செலுத்தியுள்ளார். அவர் அரசிற்கு ரூ.5,07,911 பாக்கி வைத்துள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள்…பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.