ஹிஜாப் விவகாரம் : மகள்கள் குறித்து பேசிய நெட்டிசனுக்கு குஷ்பு பதிலடி

BJP Khushboo Say About Hijab Issue : கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாஜகவின் நடிகை குஷ்பு காட்டமாக பதிலை அளித்துள்ளார்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில், உள்ள பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 மாணவிகள் வகுப்பறை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுட்ட நிலையில், ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு கொடுத்த உரிமை என்று கூறி மாணவிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த இந்நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதித்தால் நாங்கள் காவி துண்டை அணிந்துகொண்டு வகுப்பறைக்குள் வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்பினர். முதலில் உடுப்பி மாவட்டத்தில் பரவிய இந்த போராட்டம் தற்போது அருகில் உள்ள மங்களூர், சிவாமொக்கா சிக் மங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டு முஸ்லீம் மாணவிகளும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்ப்பட்ட மனு மீதான் விசாணையில் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த விவகாராம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சிகள் பலரும் இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்துத்துவா மாணவர்கள் மத்தியில் மாட்டிக்கொண்ட முஸ்லீம் மாணவியிடம் இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இழுப்பினர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் மாணவி சிறிது தூரம் சென்று அல்லாஹ் அக்பர் என்று தனது கையை உயர்த்தி சொல்லிவிட்டு செல்கிறார். இது தொடர்பான வீடியோ பதிவு ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் நடிகை குஷ்புவிடம், இந்த கொடுமையை கண்டபிறகும், உங்களது கள்ளமவுனம் மற்றும் சுயநலம் அமைதி காக்க சொல்கிறதா? இந்த தாக்குதலும் அச்சுறுத்தலும், கங்பரிவார்க்கும்பலால் நாளை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாது என் நம்புகிறீர்களா குஷ்பூ மேடம் என்று கேட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள நடிகை குஷ்பு குஷ்பூ ‘உங்களுடைய கட்சி பற்றி என்னிடம் பேசாதீர்கள். உங்களைப் பற்றி என்னை விட யார் நன்றாக அறிவார்கள்? மறந்துவிடாதீர்கள், நான் விசிகேவின் குண்டர்களை எதிர்த்து ஒற்றைக் ஆளாக போரிட்டு வெற்றி பெற்றேன். பெண்ணாக, தாயாக, இந்தியனாக. பயமுறுத்த ஒரு பலவீனமான பெண்ணைக் கண்டுபிடியுங்கள்

2005 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது 5 வயது மகள் எனது வீட்டை சுற்றி வளைத்து என்னை பிணைக் கைதியாக பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உங்கள் கட்சி என்னை அனுமதிக்காத போது, அங்கு எந்த சங்கப் பரிவாரங்களையும் நான் காணவில்லை, அது உங்கள் கோழைத்தனம். முதுகெலும்பில்லாத குண்டர்கள். உங்களைப் போன்ற திருடர்களை நான் இன்னும் பார்க்கவில்லை.

உங்களைப் போன்ற குண்டர்களுக்கு உங்கள் முகத்தையோ அடையாளத்தையோ காட்ட தைரியம் இருக்காது. மேலும் எனது மகள்கள் பள்ளிக்கு யூனிஃபார்ம் அணிந்திருந்தனர். அவர்களின் இந்தியத்தன்மையை பெருமையுடன் முன்னெடுத்துச் செல்வது, மதம் அல்ல. நினைவிருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இந்தியராக உங்கள் பலத்தை காட்டுவதற்காத்தானே தவிர உங்கள் மதத்தை காட்டுவதற்காக அல்ல இதை வைத்து அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் வெளியில் என்ன உடை உடுத்துகிறீகள் என்பது உங்கள் விருப்பம். ஆனால் பள்ளிகளில் நடத்தை விதிகளை மதித்து யூனிபார்ம் அணிவது தான் சிறந்ததாக இருக்கும். கற்றலை மதிக்கவும். எந்த மத்தை சேர்ந்தவராக இருந்தாலும், குழந்தைகள் பெருமை மிக்கவர்கள் அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த எதிர்கட்சிகள் ஏன் ஆர்வம் காட்டுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒன்றினைய வேண்டும். இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.