பெங்களூரு: ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.