தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஒரு டீக்கடைக்கு சென்று அமர்ந்துள்ளார்.
Caption pls 😜😜 pic.twitter.com/zX1hc7dEQb
— அஇஅதிமுக (@ADMKofficial) February 10, 2022
அப்போது உதயநிதி ஸ்டாலின் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் இருந்த திமுக நிர்வாகிகள் கைகட்டி உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.