கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து வேறு சில கல்லூரிகளிலும் இதே பிரச்சினை உருவானது.
இதையடுத்து, இந்து மாணவர்கள் காவி துணி அணிந்து வந்தனர். இதனால் இருதரப்பு மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா திக்சித், ஜே.எம்.காஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹிஜாப் அணிந்து வந்ததற்காக மாணவிகள் வகுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதிட்டார்.
இதையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு
கர்நாடக உயர் நீதிமன்றம்
அனுமதியளித்துள்ளது.