Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 98-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
India News Update: செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
UP Election: உத்தரப் பிரேதச சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
Tamilnadu Corona update: தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது.
“ “
தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் 24 பேர், நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட புகாரில் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்
மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய வேண்டியுள்ளதால், வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த ‘புத்தகப்பை இல்லா தின’ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்
ஏழைகளுக்காக உழைக்கும் எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் பாஜக அஞ்சாது. ஆதாரங்களை அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது ஏன்? குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள் என தெரியவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணத்திற்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர்
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வண்ணம் பாஜக மாநில அலுவலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்
காங்கிரஸ் ஆட்சியில் இருண்டு கிடந்த கிராமங்கள், பாஜக ஆட்சியில் மின்மயமாக்கப்பட்டுள்ளன என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27க்கு பதிலாக 28ஆம் தேதி நடைபெறும். 2ம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3க்கு பதிலாக மார்ச் 5ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ புதிய திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. ‘தலைவர் 169’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் சொல்லும் பழனிசாமி என மக்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பொய் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
ஹிஜாப் விவகாரத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது துரதிருஷ்டவசமானது. இந்திய கலாச்சாரமும், அரசியலமைப்பும் சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க கற்றுக்கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிரசவ வார்டில் உயிரிழந்த பிரியா என்ற பெண்ணின் கணவருக்கு ரூ.14.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
6 – 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகமில்லா தினத்தை கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் இந்தி ட்ரெய்லரை அஜய் தேவ்கனும், தெலுங்கு ட்ரெய்லரை நடிகர் மகேஷ் பாபுவும், கன்னட ட்ரெய்லரை கிச்சா சுதீப்பும் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகின்றனர்!
ஜிஎஸ்டி வரிவிதிப்பில், வைரத்திற்கு 5 சதவீதம் மற்றும் சானிடரி நாப்கின்க்கு 12 சதவீத வரி குறித்து பேசிய திமுக எம்பி அப்துல்லா, ஒரு பெண்ணுக்கு வைரம் முக்கியமா அல்லது சானிடரி நாப்கின் முக்கியமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ந் தேதிகளில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், இந்த க்ருணால் பாண்டியா 100 சதவீதம் ஆட்டத்தை முடித்து தருவான் இது அதீத நம்பிக்கை இல்லை என்மேல் நான் வைத்துள்ள நம்பிக்கை என்று க்ருணால் பாண்டியா கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லை! இந்த தளவுவு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது
ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது
இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை ரூ.163-லிருந்து ரூ.200ஆக உயர்த்தியது ஏர்டெல். அடுத்த 3-4 மாதங்களுக்கு பிறகு சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக 36வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
பிரபல WWE மல்யுத்த வீரரான கிரேட் காளி எனப்படும் தலிப் சிங் ராணா டெல்லியில் பாஜகவில் இணைந்தார்
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் பேரணியில் கார் ஏற்றி விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை ஆனால் உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் உணவுப் பொருட்களை கோயில் வளாகத்திற்கு வெளியே விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கேதர்நாத் கோவிலில் ஆதிசங்கர் சிலை திறப்பு நிகழ்வின் போது பேசிய மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல்கள் இல்லை என்றும், மத்திய அரசின் உத்தரவுபடி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது; அது அரசியல் அல்ல, ஆன்மீக நிகழ்ச்சி தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்புக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சமூக நீதி கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என்றும் அறிவிப்பு.
காவல்துறையினர், ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்றும், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை
மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என உயர் நீதிமன்றம் கேள்வி. நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி ஆகியவற்றிற்காக போராடுவது எல்லாம் அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியது யாராக இருந்தாலும் தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் பேச்சு.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்று கூறி நீதிபதி ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார்.
10 மற்றும் +2 வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் நேரடி முறையில் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவக்குழுவை எய்ம்ஸ் அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு விசாரணை ஆணையத்திற்கு உதவும்.
அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் என்று உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு காங். எம்.பி., ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சென்னையில் பறக்கும் படைகள் களமிறங்கியுள்ளன.
மதுரை வடக்கு வாசல் பகுதியில் வாக்களிக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக நிர்வாகிகள் மேகலா, சந்திரகாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். அதிமுக சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுமாறும் கட்சியினரிடம் அவர் கோரினார்.
ராமானுஜர் சிலை ‘மேட் இன் இந்தியா’ அல்ல, மேட் இன் சீனா” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015 இல் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் 5-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,241 பேர் உயிரிழந்தனர். அதே நேரம், 1,67,882 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் – தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.