பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற முந்தைய காலங்களில் திமுக எப்படி நடந்து கொண்டதோ அந்த நிலையை மாற்றி கொள்ளாமல் தற்போதும் அதைப் போலவே நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தலில்ன் போது, வக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய தினங்களில் திமுக -வால் வன்முறை அரங்கேறியது என்றும், ஆனால் தற்போது தேர்தலுக்கு முன்பாகவே வன்முறை வெறியாட்டத்தை திமுக ஆரம்பித்துவிட்டது என மக்கள் நினைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது ஜனநாயக படுகொலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு விசப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், விடியா அரசின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கின் சீர்ழவிற்கு இதுவே சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.