கிரிப்டோவுக்கு எந்த மதிப்பும் இல்லை, சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ரிஸ்க் எடுப்பது உங்க இஷ்டம்..!

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவில்லை என்றாலும், கிரிப்டோ முதலீட்டை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கிரிப்டோ மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு.

3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. !

இந்த நிலையிலும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 அடிப்படை மதிப்பு இல்லை

அடிப்படை மதிப்பு இல்லை

கிரிப்டோ முதலீடுகளும், முதலீட்டுச் சேவைகளும் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் இத்தகைய டிஜிட்டல் சொத்துக்களுக்கு எவ்விதமான அடிப்படை மதிப்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்திடுங்கள் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

 சொந்த ரிஸ்க்

சொந்த ரிஸ்க்

மேலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் ரிஸ்க்குகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும், செய்கிறீர்கள் என்பதை உணர வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 பிரைவேட் கிரிப்டோகரன்சி
 

பிரைவேட் கிரிப்டோகரன்சி

தனியார் அல்லது பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைத் தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கிரிப்டோகரன்சிக்கு நாணயம் போன்ற தன்மை இருந்தாலும், இந்தப் பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மை சிக்கல்களைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளை மொத்தமாகச் சீர்குலைக்கிறது என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.

 இருமாத நாணய கொள்கை கூட்டம்

இருமாத நாணய கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இவை அனைத்தையும் இன்று காலை இருமாத நாணய கொள்கை முடிவுகளை அறிவித்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் பிரைவேட் கிரிப்டோகரன்சி குறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 10வது முறையாக சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 கிரிப்டோகரன்சி விலை

கிரிப்டோகரன்சி விலை

இன்றைய வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலை நிலவரம்

பிட்காயின் – 43,832.070 டாலர்

எதிரியம் – 3,184.110 டாலர்

டெதர் – 1.000 டாலர்

பினான்ஸ் காயின் – 417.250 டாலர்

USD காயின் – 1.000 டாலர்

ரிப்பிள் – 0.866 டாலர்

கார்டானோ – 1.180 டாலர்

சோலானோ – 113.420 டாலர்

டெரா – 56.870 டாலர்

அவலான்சி – 90.270 டாலர்

போல்காடாட் – 22.100 டாலர்

டோஜ்காயின் – 0.15870 டாலர்

ஷிபா இனு – 0.00003280 டாலர்

பினான்ஸ் USD – 1.000 டாலர்

பாலிகான் – 2.000 டாலர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

cryptocurrency don’t have any value, investors doing at their own risk: RBI Shaktikanta Das

cryptocurrency don’t have any value, investors doing at their own risk: RBI Shaktikanta Das கிரிப்டோவுக்கு எந்த மதிப்பும் இல்லை.. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ரிஸ்க் எடுப்பது உங்க இஷ்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.