இந்தியாவில் கிளீன் எனர்ஜி துறையில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமம் 75,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் எப்படி நிறுவனத்தையும், நிறுவனப் பங்குகளையும் கைப்பற்றி வர்த்தகத்தைக் குறைந்த காலகட்டத்தில் விரிவாக்கம் செய்ததோ அதே முறையைத் தற்போது கிளீன் எனர்ஜி துறையிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் ஆட்டோமொபைல் துறையில் இறங்கும் மிக முக்கியமான திட்டத்தின் முதல் படியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று எடுத்து வைத்துள்ளது.
இறுதிகட்டத்தை எட்டிய சின்டெக்ஸ்.. முகேஷ் அம்பானிக்கு கிடைக்குமா..?!
ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை அளிக்கும் ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ் நிறுவனத்தில் சுமார் 50.16 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் கிளீன் எனர்ஜி துறைக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கிய 7 நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி நிறுவனம் ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ் நிறுவனத்தின் 100 ரூபாய் முக மதிப்புக் கொண்ட 34,000 சீரியஸ் ஏ கட்டாயமாக மாற்றக்கூடிய விருப்பப் பங்குகளைச் சுமார் 50.16 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது எனப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
50.16 கோடி ரூபாய் முதலீடு
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி நிறுவனம் ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ் நிறுவனத்தில் எத்தனை சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது என வெளியிடாத நிலையில் இந்தப் பங்கு கைப்பற்றல் பணி மார்ச் 2022க்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூர்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ் 2, 3, 4 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை முழுவதுமாகத் தயாரிக்கிறது. வாகனங்கள் தயாரிப்பு முதல் வாகனங்களுக்குத் தேவையான டெக்னாலஜி முதல் அனைத்தையும் சொந்தமாக நிறுவனத்திலேயே தயாரிக்கிறது.
பேட்டென்
மேலும் இந்நிறுவனத்திடம் 60 நாடுகளில் சுமார் 26 பேட்டென் வைத்துள்ளது, குறிப்பாக எலக்ட்ரிக் மோட்டார், எலக்ட்ரிக் ஜெனரேட்டார், வெகிக்கல் கன்ட்ரோல்ஸ், மோட்டார்ஸ் கன்ட்ரோல்ஸ், EV டிரான்ஸ்மிஷன், டெலிமேட்டிக்ஸ், IoT, பேட்டரி மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவில் பேட்டென் வைத்துள்ளது.
அரசு ஒப்புதல்
ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் லேப்ஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது, 2020-21ஆம் நிதியாண்டில் ஆல்டிகிரீன் ப்ராபல்ஷன் சுமார் 103.82 லட்சம் ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆல்டிகிரீன் நிறுவனத்தில் முதலீடு செய்ய அரசின் எவ்விதமான ஒப்புதலும் தேவையில்லை.
Reliance Inds investing 50 crores in Bangalore EV firm Altigreen, Entering into Automobile industry
Reliance Inds investing 50 crores in Bangalore EV firm Altigreen, Entering into Automobile industry பெங்களூர் நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ்.. ஆட்டோமொபைல் துறைக்குள் என்டரி..!