காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள், காய்கறிகளின் விலையை கருத்தில் கொண்டு அவர்கள் சாகுபடி செய்யும் காய்கறிகளின் விதைகளையே மீண்டும் சாகுபடி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் மற்றும் கீரைகளில் 100 கிராம் விதையையும், தர்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய் மற்றும் பாகல், புடலை, பீர்க்கன்காய் ஆகியவை 250 கிராம் விதையையும் சேகரித்து விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி வைத்து முளைப்புத் திறனை கண்டறிந்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.