அகமதாபாத்:
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் இரண்டு ஆட்டங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தன. முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. இரண்டாவது போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் வீழ்ந்த 19 விக்கெட்டுகளில் 13 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆடுகளம் பௌலிங் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் முறையில் முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதையும் படியுங்கள்… ரிஷப்பண்ட் தொடக்க வீரராக களமிறங்கியது குறித்து ரோகித் சர்மா விளக்கம்