புதுடெல்லி,
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 4 சதவிகிதமே தொடரும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல, ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவிகிதம் என்ற பழைய நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியத்தின் கணிப்புப்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 சதவிகிதமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.