கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ., முதல் நாளே வேலைக்கு உலை வைத்துக்கொண்ட ரஷ்ய அதிகாரி!


ரஷ்யாவில் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள ஓவியத்தில் விளையாட்டுத்தனமாக கண்களை வரைந்துவைத்த பாதுகாவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் முதல் நாளிலேயே அவர் இப்படி செய்து, அவரது வேலைக்கு அவரே உலை வைத்துகொண்டுளோர்.

ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரத்தில் உள்ள Boris Yeltsin Presidential Center-ல் சோவியத் யூனியன் காலத்தில் வரையப்பட்ட ‘Three Figures’ (மூன்று உருவங்கள்) என்ற ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Anna Leporskaya எனும் புகழ்பெற்ற ரஷ்ய கலைஞரால் வரையப்பட்ட இந்த ஓவியம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பண மதிப்பில் ரூபாய் 20 கோடி)என கூறப்படுகிறது.

விலையுயர்ந்த இந்த ஓவியத்தில், 60 வயதாகும் அந்த பாதுகாவல் அதிகாரி, கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ஒரு பால் பாயிண்ட் பேனாவால் கண்களை வரைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதுவும் அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் இந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரிக்கு அபராதமும் 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஓவியத்தை மீண்டும் சீரமைக்க சுமார் 3300 டொலர் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓவியம் 1 மில்லியன் டொலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.