சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமித்துகுடியரசுத் தலைவர் உத்தரவிட் டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவி யேற்றார்.
கொலீஜியம் பரிந்துரை
இந்நிலையில், முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி, தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஷ்வர்நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமி்த்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். வரும் செப்.12-ல் முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது