வைணவ திருத்தலங்களில் உலக அளவில் பிரபலமான கோயில்களில் முக்கியமான திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்வதற்கு ஆந்தி மாநில அரசும், தேவஸ்தான நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதித்து வந்தன. முக்கியமாக பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதை தவிர்க்கும் பொருட்டு, இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்களை போன்று ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையின் தீவிரம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் கூறுவதையடுத்து, திருமலை திருப்பதி பக்தர்களான கொரோனா கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் பெருமளவில் தளர்த்தி உள்ளது.
இந்தியா வரும் வெளிநாட்டு ப.யணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
இதில் முக்கியமாக, இதுநாள்வரை சில மாதங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த இவவச தரிசன டிக்கெட்டுகள், வரும் 16 ஆம் தேதி (பிப்ரவரி 16) முதல் பக்தர்களுக்கு வழக்கம்போல் நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பூதேவி காம்ப்ளக்ஸ்- அலிபிரி, சீனிவாசம் தங்கும் விடுதி, கோவிந்தராஜசாமி இரண்டாவது சத்திரம் ஆகிய 3 இடங்களில் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்த நிலையில். தற்போது அவை மீண்டும் நேரடியாக வழங்கப்பட உள்ளதால் ஏழுமலையான் பக்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.