நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்கள் வைக்க பல விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் சில விஷயங்களை தூங்கும் முன் தவறாமல் செய்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
-
நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகளை சாப்பிடலாம். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை அளவும் பராமரிக்கப்படுகிறது.
-
நீரிழிவு நோயாளிகள் தூங்குவதற்கு முன் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். உறங்கும் நேரத்தில் இரத்தச் சர்க்கரையின் அளவு 90 முதல் 150 மில்லிகிராம்கள் (mg/dL) வரம்பில் இருக்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் தூங்கும் முன் டீ, காபி, சாக்லேட் மற்றும் சோடா சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை உட்கொள்வது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
- இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது சிறிது நேரம் நடக்க வேண்டும். தூங்கும் முன் லேசான உடற்பயிற்சி கூட நன்றாக தூங்க உதவும். உடலை ரிலாக்ஸ் செய்ய, பாடல்கள் கேட்பது, புத்தகங்கள் படிப்பது போன்ற பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம்.