பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா சேல் (mobiles bonanza) விற்பனை தொடங்கி உள்ளது. இந்த விற்பனை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இந்த சலுகை விற்பனை நாளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ஒப்போ நிறுவனத்தின் 5ஜி போனுக்கு பெரும் தள்ளுபடி உள்ளது. சலுகைகளைப் பயன்படுத்தி, நீங்கள்
ஒப்போ ஏ53எஸ் 5ஜி
ஸ்மார்ட்போனை வெறும் 190 ரூபாய்க்கு வாங்கலாம். அதிர்ச்சி அடைய வேண்டாம்; மொபைலை எப்படி இந்த சலுகை விலையில் பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Poco M4 Pro 5G: Dimensity 810 சிப்செட் உடன் வரும் போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!
ரூ.190க்கு ஒப்போ ஏ53எஸ் 5ஜி
ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.16,990 ஆகும். ஆனால் இந்த மொபைல் பிளிப்கார்ட்டில் ரூ.15,990க்கு கிடைக்கிறது. போனுக்கு 5% விழுக்காடு கூடுதல் தள்ளுபடி உள்ளது. இது தவிர, வங்கி கிரெடிட் கார்டு, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன. இந்த சலுகைகளைப் பயன்படுத்தி நாம் போனை குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கூடுதலாக ரூ.800 கேஷ்பேக் கிடைக்கும். அப்போது, போனின் விலை ரூ.15,190 ஆக இருக்கும். இது தவிர ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு Exchange Offer கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனாக பயனர்களுக்கு ரூ.15,000 வரை கிடைக்கும்.
Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டால், நீங்கள் இந்த தள்ளுபடி பெறலாம். ஆனால் உங்கள் பழைய போன் சேதமடைந்ததாக இருக்கக் கூடாது. அப்படி என்றால் குறிப்பிட்ட மாடல் போன்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் விலை கிடைக்கும். மேற்கூறிய சலுகைகளுடன் ஒப்போ ஏ53எஸ் ஸ்மார்ட்போனை ரூ.190க்கு வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
ஒப்போ ஏ53எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் (oppo a53s 5g specifications)
இந்த ஸ்மார்ட்போன் முழுஅளவு எச்டி+ எல்சிடி திரை, 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் கூடிய மூன்று பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இதில் நிறுவப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய இரு வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 4890mAh பேட்டரி உடன் வரும் இந்த மொபைல், 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெறுகிறது. கிரிஸ்டல் ப்ளூ, இங்க் பிளாக் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் வருகிறது.
இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!
OPPO-A53s-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Dimensity 700டிஸ்பிளே6.52 inches (16.56 cm)சேமிப்பகம்128 GBகேமரா13 MP + 2 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை14990ரேம்6 GBமுழு அம்சங்கள்
OPPO-A53s-5GOPPO A53s 5G 128GB 8GB RAM