கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஹிஜாப் அணிவது இஸ்லாமியப் பெண்களின் விருப்பம். பள்ளியின் வாசல் வரை அணிந்து செல்லலாம். ஆனால், பள்ளிக்கூடத்திற்கு உள்ளே அணிந்து வர வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள்.
பள்ளிக்கூடத்திற்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால், காவித் துண்டு, நீலத் துண்டு அணிந்து வருவதும் தவறுதான். பள்ளியில் சாதி, மத அடையாளங்களைப் புகுத்த வேண்டாம். பள்ளியின் நெறிமுறைகளை மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். நான் கூட பள்ளிக்குள் ஹிஜாப் அணிந்து சென்றதில்லை” எனத் தெரிவித்தார்.