நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
“தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை மறுநாள் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பரப்புரை விவரம் வருமாறு:
13.02.2022 ஞாயிற்றுக்கிழமை – சென்னை மாநகரம்
14.02.2022 திங்கட்கிழமை – காஞ்சிபுரம் மாவட்டம்
15.02.2022 செவ்வாய்க்கிழமை – சேலம் மாவட்டம்
16.02.2022 புதன்கிழமை – தருமபுரி மாவட்டம்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.