ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது

ஜோகனஸ்பர்க்:

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு முறையும் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதல் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது.

இதற்கிடையே ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.

 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க இயக்குனர் மாட் ஷிடிசோ மொய்ட்டி கூறியதாவது:-

கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதை மேலும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆப்பிரிக்க கண்டம் வேகமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

தடுப்பூசி போடுவதில் ஏற்றதாழ்வுகள் உள்பட பல முரண்பாடுகளுக்கு இடையே தொற்றை நாங்கள் உறுதியுடன் எதிர்கொண்டோம். ஆனால் கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளோம். பொருளாதாரத்தில் மிகப் பெரிய சேதத்தையும் சந்தித்துள்ளோம்.

ஆப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு இழப்பு 13.8 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆப்பிரிக்கா கண்டம் 67 கோடிகளுக்கும் அதிகமான தடுப்பூசியை பெற்ற போதிலும் 11 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி கொரோனா தொற்றால் மிக குறைவான பாதிப்புக்குள்ளான கண்டங்களில் ஆப்பிரிக்காவும் உள்ளது. பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு வருகின்றன. ஆனால் 85 சதவீத ஆப்பிரிக்கர்கள் ஒரு தவணை தடுப்பூசியை கூட பெறவில்லை.

உலகின் பிற பகுதிகளில் அடையக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை எட்டுவதற்கு ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “தொற்று நோய் இன் னும் முடிவடையவில்லை. ஆனால் உலக நாடுகள் நினைப்பது போல அதன் முடிவுகள் முன்கூட்டியே இருக்கலாம்” என்றார்.

இதையும் படியுங்கள்… கூடங்குளத்தில் அணு உலைக்கழிவுகளை சேமிக்க அனுமதிக்க கூடாது- வைகோ அறிக்கை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.