இலங்கையில், ஒட்சிஜன் தேவைப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது.
பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.