சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பால் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர் ரசிகர்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை இயக்கிய
கார்த்திக் சுப்புராஜ்
இயக்கத்தில் ‘
மகான்
‘ படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 60 வது படமான மகானில் முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ளது. விக்ரம் மற்றும் துருவ் இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்துள்ளதாக படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
சைலண்ட் மோடில் தனுஷ்.. ‘அந்த நாளெல்லாம் இனிமே வராதா..?: புலம்பும் ரசிகர்கள்..!
இந்நிலையில் ‘மகான்’ படத்தை பார்த்து ரசித்துள்ள ரஜினி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொலைபேசியில் அழைத்து, எக்சல்லெண்ட் மூவி… சூப்பர்ப் பெர்பாமன்ஸ்… பிரில்லியன்ட்… என்று பாராட்டியுள்ளார். இதனை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள கார்த்திக் சுப்புராஜ், “ஆம். தலைவர் லவ்டு மகான்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
நேற்றைய தினம் ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் மாஸாக வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை
நெல்சன் திலீப்குமார்
இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். டார்க் காமெடியில் கலக்கும் நெல்சன், ரஜினியுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
ரஜினி என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் – இயக்குனர் சுசீந்திரன்!