ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒடிசாவில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, 107 நகராட்சிகள் மற்றும் புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது.
மேலும், மாநகராட்சி கவுன்சிலர்கள், கார்ப்பரேட்டர்கள், தலைவர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பையும் உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்.. ஆந்திராவில் தமிழ் வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு பாட புத்தகம்- மு.க.ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டது