பிப்ரவரி 28 முதல் பிரான்ஸில் முக்கிய கொரோனா விதி தளர்த்தப்படுதவாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதாவது, 28ம் திகதி முதல் உட்புற இடங்களில் மக்கள் இனி முகக் கவசம் அணி வேண்டியதில்லை.
நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படும் பார்கள் மற்றும் உணவகங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களில் இந்த விதி பொருந்தும்,
இருப்பினும், பிரான்சில் உள்ள மக்கள் பிப்ரவரி 28 ம் திகதிக்குப் பிறகும் பொது போக்குவரத்தில் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
தடுப்பூசி தேவைப்படாத உட்புற இடங்களிலும் முகக் கவசங்கள் தொடர்ந்து கட்டாயமாக இருக்கும்.
நாட்டின் சுகாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த விதிகளை தளர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 2 ஆம் திகதி மக்கள் முகக் கவசம் அணிந்து வெளியில் செல்வதற்கான தேவையை பிரான்ஸ் ஏற்கனவே ரத்து செய்து விட்டது நினைவுக் கூரத்தக்கது.