அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது.
அந்நாட்டின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ராக்கெட் ஏவும் நிறுவனமான அஸ்ட்ரா ஸ்பேஸ் நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயற்கை கோளை வர்த்த ரீதியில் விண்ணில் நிலை நிறுத்த ராக்கெட் மூலம் ஏவும் பணியில் ஈடுபட்டது.
முதல் முறையாக புளோரிடாவில் உள்ள தளத்தில் இருந்து அந்த நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் விண்நோக்கி சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் 14 வது நிமிடத்தில் விண்ணிலேயே வெடித்து சிதறியது. முதல் முயற்சியே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கூறியுள்ள அஸ்ட்ரா ஸ்பேஸ் நிறுவனம்,அடுத்த முயற்சியில் வெற்றி நிச்சயமென கூறியுள்ளது.