இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் உணவு விநியோகம் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தத் பரவலை தடுப்பதற்காக அதே ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, பெருந்தொற்று பரவல் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வைரஸ் பரவும் அச்சத்தால், ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் கட்டண உணவு விநியோகம் தொடங்கப்படவில்லை.
இந்த சூழலில், முதல்கட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் 30 சதவீத ரயில்களில் உணவு விநியோகம் தொடங்கியது. அதன் பின்னர், நடப்பாண்டு ஜனவரி மாதம் 80 சதவீத ரயில்களில் உணவு விநியோகம் தொடங்கியது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி மீதமுள்ள ரயில்களிலும் உணவு விநியோகம் தொடங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM