திருவாரூர்:
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், திருவாரூரில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.