ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? பாராளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினர்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களும் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு தற்போதைய நீட் எனும் நுழைவுத் தேர்வானது சமமான வாய்ப்பினை உருவாக்கி தருகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களும் நீட் எனும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான சமமான வாய்ப்புகளை உருவாக்க ஒன்றிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.
• கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் நீட் எனும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற தயாராவதற்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் என்ன என்பதனை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்.
மருத்துவக் கல்வியில் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அறிந்துகொள்ளவும், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தங்கள் சக மாணவர்களை விட சாதகமாக அமைகிறதா என்பதை ஆய்வு செய்யவும் நீட் தேர்வின் முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பினார்.
மருத்துவக் கல்வி பயில்வோருக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள் பெருமளவு பெருகிவிட்ட நிலையில் அதுகுறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வறிக்கை தயார் செய்துள்ளனவா என கேள்வி எழுப்பினார்.