புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 1,36,962 பேர் குணமடைந்துள்ளனர். 804 பேர் உயிரிழந்தனர்.
தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 6வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.இதனால், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,86,544 ஆகவும், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,68,120 ஆகவும்,இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,07,981 ஆகவும் அதிகரித்தது.
தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த கோவிட் பாதிப்பில் தற்போது 1.43 சதவீதம் பேர் சிகிச்சை பெறுவதாகவும், வைரஸ் பாதிப்பில் இருந்து 97.37 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது வரை 1,72,29,47,688 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement