இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைப்புகளில் உள்ள கோளாறு காரணமாக, ஆட்சிக்கு வந்த புதிதில் அளித்த உறுதிப்படி, நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியவில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சிறப்பாக செயல்பட்ட அமைச்சகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த புதிதில், புரட்சிகரமான நடவடிக்கை மூலம் உடனடியாக மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம். ஆனால், பின்னர் தான் அதிர்ச்சியை தாங்கும் திறன் எங்கள் அமைப்பிற்கு இல்லை என்பதை உணர்ந்தோம். அரசும், அமைச்சகங்களும் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை. அரசுக்கும், நாட்டின் நலனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாதது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
ஏற்றுமதி மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டு வரவும், மக்களின் நிலைமையை உயர்த்தவும், வறுமையை ஒழிக்கவும் அமைச்சகங்கள் பணியாற்றின. அமைப்பில் உள்ள கோளாறு காரணமாக ஆட்சிக்கு வந்த புதிதில் அளித்த உறுதிமொழிப்படி நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.
Advertisement