விண்ணில் ஏவப்பட்ட 40க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள், சூரியப் புயல் காரணமாக எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பி இருந்த 40 செயற்கைக்கோள்கள்
சூரிய புயல்
தாக்குதலால் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன. இது தொடா்பாக ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது:
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூரியப் புயல், வளிமண்டலத்தை அடா்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக்கோள்களில் (ஒரு செயற்கைக் கோளின் எடை 260 கிலோ) 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன. சில செயற்கைக்கோள்கள் புவி வட்டப் பாதையிலிருந்து விலகும் தறுவாயில் உள்ளன. இந்த விபத்தைத் தவிா்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த சம்பவத்தால் புவி வட்டப் பாதையிலோ, பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பூமியின் சுற்று வட்டப் பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமாா் 2,000 ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகிறது. இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன.
இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – அரசு இப்படியொரு ஷாக்!
ஒருவேளை, சூரியப் புயல் பூமியைத் தாக்கினால் இணையதளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகமே இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதன் முதலில் சூரியப் புயல் தாக்குதல், கடந்த 1859 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது, டெலிகிராஃப் நெட்வோர்க் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மின்சார அதிர்வலைகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. இது போன்ற சூரியப் புயல்கள் வரும் காலங்களில் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.