மும்பை: பிரபல தொழிலதிபர் ராகுல்பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அவரதுமறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சியினர், தொழில்அதிபர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் பஜாஜ் குழுமமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.
வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாக, கடந்த வருடம், பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் விலகி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இநத் நிலையில் சிகிச்சை பலனின்றி ராகுல் பஜாஜ் காலமானார். அவரது மறைவிற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழில் அதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்