ஹோண்டா, யமஹா, சுஸுகி-ஐ ஓடஓட விரட்டிய ராகுல் பஜாஜ்..!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் 83 வயதான நிலையில், அவருக்கு நிமோனியா மற்றும் இதயப் கோளாறு வாயிலாக ஏற்பட்ட உடல்நல குறைவால் சனிக்கிழமை (இன்று) பிற்பகல் 2.30 மணியளவில் மறைந்தார்.

கல்லூரி படிப்பை முடித்த கையோடு நிர்வாகப் பொறுப்பில் உட்கார்ந்த பல சவால்களைச் சமாளித்த பஜாஜ் என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற கையோடு, அவரின் தந்தை கமல்நாயன் பஜாஜ் நடந்தி வந்த சிறு ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ குரூப்-ல் 1968ஆம் ஆண்டுத் துணை பொது மேலாளர் என்னும் மிக முக்கியமான பொறுப்பேற்றார்.

 நேவல் கே ஃபிரோடியா

நேவல் கே ஃபிரோடியா

ராகுல் பஜாஜ் தனது தந்தையின் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ குரூப் நிறுவனத்தில் மார்கெட்டிங், அக்கவுன்ட்ஸ், கொள்முதல் மற்றும் தணிக்கை எனப் பல முக்கியப் பிரிவுகளில் பணியாற்றினார். பஜாஜ் ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி நேவல் கே ஃபிரோடியாவின் வழிகாட்டுதலின் கீழ், வணிகத்தின் நுணுக்கங்களை ராகுல் கற்றுக்கொண்டார்.

 நிர்வாக இயக்குநர் பதவி
 

நிர்வாக இயக்குநர் பதவி

பின்னர் ஃபிரோடியாவும் பஜாஜ்களும் பிரிந்தனர். 1972 ஆம் ஆண்டில் ராகுல் பஜாஜ்-ன் தந்தை கமல்நாயன் பஜாஜ் இறந்த பிறகு, ராகுல் பஜாஜ், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.

 உலகளாவிய நிறுவனம்

உலகளாவிய நிறுவனம்

ராகுல் பஜாஜ் ஆரம்பம் முதல் மிகவும் வேகத்துடனும், துடிப்புடனும், லட்சியத்துடனும், அதேவேளையில் புத்திசாலித்தனமாகவும் இருந்ததால், கமல்நாயன் பஜாஜ் நிர்வாகம் செய்து வந்த சிறிய வாகன நிறுவனத்தை உலகளாவிய மாபெரும் நிறுவனம் என்ற உயரத்திற்குக் கொண்டு சென்றார்.

 1 பில்லியன் டாலர் வருவாய்

1 பில்லியன் டாலர் வருவாய்

ராகுல் பஜாஜ் தலைமையின் கீழ், பஜாஜ் குழுமம் அதன் உச்சநிலையைக் கண்டது மட்டும் அல்லாமல் நிர்வாக இயக்குனர் பதவியைப் பெற்ற 10 வருடத்திற்குள் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக மட்டும் அல்லாமல் 1 பில்லியன் டாலர் என்ற வருவாயை அளவீட்டைத் தாண்டியது.

 பஜாஜ் சேடக் ஸ்கூட்டர்

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர்

ராகுல் பஜாஜ் முயற்சியில் தான் சேடக் மற்றும் பஜாஜ் சூப்பர் மாடல்கள் உருவாக்கப்பட்டது. இந்த மாடல் வாகனங்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தையும் விற்பனையும் பதிவு செய்தது. ஒரு கட்டத்தில் பஜாஜ் சேடக் ஸ்கூட்டர்கள் ஆர்டர் செய்தவர்கள் 5-6 வருட காத்திருந்து பெற்ற கதையெல்லாம் இந்தியாவில் இருக்கிறது. இத்தகைய டிமாண்ட் இன்றும் பலகுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

 இத்தாலிய வெஸ்பா

இத்தாலிய வெஸ்பா

இத்தாலிய வெஸ்பா ஸ்பிரிண்டை அடிப்படையாகக் கொண்டே பஜாஜ் சேடக் தயாரிக்கப்பட்டாலும், அதன் வடிவத்தில் பல மாறுப்பாடுகளையும், இந்தியர்களுக்கான பல புதுமைகளையும் அறிமுகம் செய்து வெற்றிகண்டவர் ராகுல் பஜாஜ். மேலும் ராகுல் பஜாஜ் உருவாக்கிய ‘Hamara Bajaj’ இன்றும் பிரபலம்.

 ஹோண்டா, யமஹா, சுஸுகி

ஹோண்டா, யமஹா, சுஸுகி

2001 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சந்தை தாராளமயமாக்கல் அமலாக்கம் செய்யப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஹோண்டா, யமஹா மற்றும் சுஸுகி ஆகியவை புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி மொத்த இந்தியா வர்த்தகத்தையும் ஆட்கொண்டது.

 சரிவு பாதை

சரிவு பாதை

இதனால் பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை மோசமான நிலையை அடைந்தது. அதைத் தொடர்ந்து 2001 காலக்கட்டத்தில் ரெசிஷன் பஜாஜ் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்தது.

 பஜாஜ் பல்சர்

பஜாஜ் பல்சர்

அதைச் சமாளிக்கும் வகையில் ராகுல் பஜாஜ் , மொத்த வர்த்தகத்தையும் அப்டேட் செய்து பஜாஜ் பல்சர் என்ற பைக்-ஐ அறிமுகம் செய்தார். இதன் பின்பு மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை ஆட்சி செய்யத் துவங்கினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rahul bajaj Gamechanger of Indian Automobile after liberalisation

Rahul bajaj gamechanger of Indian Automobile after liberalisation ஹோண்டா, யமஹா, சுஸுகி-ஐ ஓடஓட விரட்டிய ராகுல் பஜாஜ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.