அன்றாடம் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இலவச தரிசன டிக்கெட்டுகளும் நேரில் லிநியோகிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த பல மாதங்களாக இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்டுகளை போன்றே ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது . ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதத்துக்கான
இலவச தரிசன டிக்கெட்டுகள்
பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டும் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டது.
பிப்ரவரி 20 பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு செக்!
இதனையடுத்து பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வழக்கம்போல் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் இலவச தரிசன டிக்கெட்கள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, பக்தர்களுக்கு இலலச தரிசன டிக்கெட்களை வழக்கம்போல் ஆன்லைனிலேயே வழங்கலாமா என்பது குறித்து தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 17 ஆம் தேதி திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழுவின தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.