கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு 70 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் மீட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், 2014ம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை என்றார்.