குர்கிராம்:
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி) கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது:
காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அடிப்படையில் நாட்டில்வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழி லாளர்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் ஒருங் கிணைக்கப்படும். மொத்தம் 15 நகரங்களில் பரிசோதனை முறையில் இது நடத்தப்படும்.
ஏழைகளுக்கு சேவை செய்யும் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனைகளில் பணியில் சேருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் திருத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ராமேஷ்வர் தெலி, தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சலுகைகளை வழங்குவது குறித்தும், நாடு முழுவதும் உள்ள தொழி லாளர்களின் நலனுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.
இதையும் படியுங்கள்…
கணவனை கொன்று 7வது மாடியில் இருந்து சடலத்தை தூக்கி வீசிய மனைவி, மகன் கைது