புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய வகுப்பறை பற்றாக்குறையை தீர்க்க அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், தஷ்ணாமூர்த்தி அரசு நடுநிலை பள்ளி வகுப்பறைகளில் பொதுமக்களுக்கு வழங்க குடிமைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் வரண்டாவில் அமரந்து பயிலும் சூழல் நிலவியது.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, பெண் கல்வி துணை இயக்குனர் நடன சபாபதியை நேரில் சந்தித்து, வாம்பாகீரபாளை யம் பொதுமக்களுக்கு அரிசிவிநியோகம் செய்து முடிக்கும் வரை தற்காலிகமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு அறைகள் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.மேலும், அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர் வசுந்தரா தேவியையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, பெண் கல்வி துணை இயக்குனர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு அறைகள் வழங்க ஒப்புதல் வழங்கினார்.
Advertisement