மேற்கு வங்கத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, திடீரென சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், அரசமைப்பு சட்டம் 174-ன் படி, தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியிலோ, மார்ச் மாதத்திலோ பேரவையை நடத்த திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. மேலும், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் ஒன்றும் கொண்டுவர முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஆளுநர் பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி, சபாநாயகர் ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகே பேரவையை கூட்ட முடியும். இது மேற்கு வங்க அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM