புதுடெல்லி: சென்னை – பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது.
டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, வாரணாசி-ஹவுரா, தில்லி- அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 8 வழித்தடங்களில் எந்த ஒரு திட்டத்திற்கும் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
ஏற்கெனவே தொடங்கிய மும்பை- அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்புப் பணிகளே இன்னும் நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.